அபியர்டோ ஓபன்: பைனலில் லினெட்

டாம்பிகோ: மெக்சிகோவில் நடைபெறும் அபியர்டோ ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் விளையாட, போலந்து வீராங்கனை மாக்தா லினெட் தகுதி பெற்றார். அரையிறுதியில் கனடாவின் ரெபக்கா மரினோவுடன் (31 வயது, 72வது ரேங்க்) மோதிய லினெட் (30 வயது, 55வது ரேங்க்) 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் 2 மணி, 16 நிமிடம் போராடி வென்றார்.

மற்றொரு அரையிறுதியில் சீனாவின் லின் ஸூவுடன் (28 வயது, 62வது ரேங்க்) மோதிய இத்தாலி வீராங்கனை எலிசபெத்தா கோக்சியரெட்டோ (21 வயது, 79வது ரேங்க்) 6-4, 7-6 (7-4) என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 12 நிமிடத்துக்கு நீடித்தது. இறுதிப் போட்டியில் லினெட் - கோக்சியரெட்டோ மோதுகின்றனர்.

Related Stories: