×

வேளாண் துறையில் 23 துணை இயக்குநர்களுக்கு இணை இயக்குநர்களாக பதவி உயர்வு

சென்னை: வேளாண்மை துறையில் 23 துணை வேளாண்மை இயக்குநர்கள் இணை இயக்குநர்களாகவும், 40 வேளாண்மை அதிகாரிகளுக்கு உதவி  இயக்குநர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் வேளாண்மை இயக்குநர் அண்ணாதுரை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு திட்டம், தமிழ்நாடு நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் மற்றும் மாநில வேளாண் வளர்ச்சி திட்டம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் போன்றவை தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்வை வளம்பெற செய்யும் திட்டங்களாகும்.

மேற்கண்ட திட்டப் பயன்களை விவசாயிகளிடம் முழுமையாக கொண்டு சேர்க்கும் விதமாக தமிழ்நாடு வேளாண்மை-உழவர் நலத்துறையில் உள்ள அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். மேலும் திட்ட பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்குள் எவ்வித தொய்வுமின்றி செயலாக்க வேண்டியுள்ளதாலும், தொடர் கண்காணிப்பு தேவைபடுவதாலும், மாவட்டம் மற்றம் வட்டார அளவில் உள்ள வேளாண் அதிகாரிகளின் காலிப்பணிடங்கள் நிரப்ப ஆணை பிறப்பிக்கப்பட்டு,

தற்பொழுது வேளாண்மை துறையில் 23 துணை வேளாண்மை இயக்குநர்கள் வேளாண்மை இணை இயக்குநர்களாகவும், 40 வேளாண்மை அதிகாரிகள் வேளாண்மை உதவி இயக்குநர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் வேளாண்மை - உழவர் நலத்துறை வெளியிட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Promotion of 23 Deputy Directors as Joint Directors in Agriculture Department
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...