அதிக ஊழியர்களை கொண்ட துறை; இந்திய ராணுவத்துக்கு உலகளவில் முதலிடம்: 2ம் இடத்துக்கு போனது அமெரிக்கா

புதுடெல்லி: உலகிலேயே அதிக ஊழியர்களை கொண்ட துறை என்ற பெயரை, அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்திய பாதுகாப்புத் துறை பெற்றுள்ளது. உலகளவில் அதிக ஊழியர்களை கொண்ட அரசு துறைகள் பற்றிய விவரத்தை, ஜெர்மனியை தலைமை இடமாக கொண்டு செயல்படும்  ‘ஸ்டேட்டிஸ்டா’ என்ற தனியார் நிறுவனம் ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. 2022ம் ஆண்டுக்கான பட்டியலை நேற்று அது வெளியிட்டது. இதில், உலகத்திலேயே அதிக ஊழியர்களை கொண்ட அரசு துறை என்ற பெயரை இந்திய பாதுகாப்புத் துறை பெற்றுள்ளது. இதில், இந்தாண்டு நிலவரப்படி மொத்தம் 29 லட்சத்து 20 ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர்.

ராணுவ வீரர்கள், நிர்வாகப் பிரிவு ஊழியர்கள், காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ள ஊழியர்கள் என, அனைத்து பிரிவு ஊழியர்களும் இதில் அடங்குவார்கள். இதன்மூலம், உலகளவில் அதிக ஊழியர்களை கொண்ட துறையில் இந்திய பாதுகாப்பு துறை முதலிடம் பிடித்துள்ளது. கடந்தாண்டு வரையில் 29 லட்சத்து 10 ஆயிரம் ஊழியர்களுடன் அமெரிக்க பாதுகாப்புத் துறை முதலிடத்தில் இருந்தது. இந்தாண்டு இது 2வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.  சீன ராணுவம் 25 லட்சம் ஊழியர்களுடன் 3வது இடத்தை பிடித்துள்ளது.

Related Stories: