5 மாவட்ட பாஜ தலைவர்கள் மாற்றம்; செங்கல்பட்டு மாவட்டம் 2ஆக பிரிப்பு: அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பு: செங்கல்பட்டு வடக்கு மாவட்டம்  சோழிங்கநல்லூர்(பரங்கிமலை கிழக்கு, மேற்கு மண்டலங்கள்),  ஆலந்தூர்(கண்டோன்மெண்ட் மண்டலம்), பல்லாவரம், தாம்பரம் ஆகியதொகுதிகள் அடங்கும். இதன் தலைவராக ஏ.வேதசுப்பிரமணியம்  நியமிக்கப்படுகிறார். செங்கல்பட்டு தெற்கு, செங்கல்பட்டு, திருப்போரூர்,  செய்யூர்(எஸ்சி), மதுராந்தகம் தொகுதிகள். இதன் தலைவராக  பி.ஜி.மோகனராஜா நியமனம்.திருநெல்வேலி தெற்கு (நாங்குனேரி, ராதாபுரம் தொகுதிகள்) தலைவர்-எஸ்.பி.தமிழ் செல்வன், திருநெல்வேலி வடக்கு (திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை தொகுதி) தலைவர்-ஏ.தயா சங்கர், மதுரை நகர்(மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை சென்ட்ரல், மதுரை மேற்கு தொகுதிகள்)தலைவர்- மகா சுசீந்திரன், மதுரை கிழக்கு(மேலூர், மதுரை கிழக்கு, சோழவந்தான்(தனி) தொகுதி) தலைவர்-ஏ.பி.ராஜசிம்மன்.

மதுரை மேற்கு மாவட்டம்(திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி தொகுதி) தலைவர்-சசிக்குமார். புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்(திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி தொகுதிகள்) தலைவர்-செல்வம் அழகப்பன், புதுக்கோட்டை மேற்கு மாவட்டம்(கந்தவர்கோட்டை(எஸ்சி), விராலிமலை, புதுக்கோட்டை தொகுதி) தலைவர்-ஏ.விஜயகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போல விழுப்புரம், நாமக்கல் பிரிக்கப்பட்டு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி தலைவராக வி.அருள், கடலூர் மேற்கு-கே.மருதை, ஈரோடு தெற்கு- வி.சி.வேதானந்தம், திருவண்ணாமலை தெற்கு- ஆர்.பாலசுப்பிரமணியம், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர்- பி.செந்தில்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: