மக்கள் நலனுக்கு எதிராக பாஜ செயல்படுகிறது: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: தமிழக மக்களின் நலனுக்கு எதிராக பாஜ செயல்படுகிறது என கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்ட அறிக்கை: தமிழக மக்களின் நலனிற்கு எதிராகவும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு குந்தகம் ஏற்படுத்துகின்ற வகையிலும் ஒன்றிய பாஜ அரசு செயல்பட்டு வருகிறது. இதை மூடி மறைக்கின்ற வகையில் பாஜ ஆர்ப்பாட்டம் நடத்துவது மிகுந்த நகைப்பிற்குரியது. ஒரே நாடு, ஒரே மொழி என்ற அடிப்படையில் அனைத்து நிலைகளிலும் இந்தி மொழியை புகுத்துவதை நோக்கமாக கொண்டு பாஜ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பாஜ நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இந்தி எதிர்ப்பு என்று கூறி ஆங்கிலத்தை திணித்தால் வீதிக்கு வந்து போராடுவோம் என்று அண்ணாமலை பேசியிருக்கிறார்.

இதில் ஒருபக்கம் இந்திக்கு ஆதரவாகவும், இன்னொரு பக்கம் ஆங்கிலத்திற்கு எதிராகவும் நடத்துகிற இரட்டை வேடத்தை தமிழக மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: