உப்பட்டி சாலையில் காட்டு யானைகள் உலா-வாகன ஓட்டிகள் அச்சம்

பந்தலூர் :  பந்தலூர் அருகே பந்தலூரில் இருந்து உப்பட்டி செல்லும் சாலையில் சென்ற காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளான உப்பட்டி பெருங்கரை, அத்திக்குன்னு, தேவாலா, அய்யன்கொல்லி, சேரம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று மதியம் உப்பட்டி பெருங்கரை பகுதியில் குட்டியுடன் கூடிய 4 காட்டு யானைகள் தேயிலைத்தோட்டத்தை ஒட்டிய வனப்பகுதியில் முகாமிட்டு இருந்தது. திடீரென யானைகள் பந்தலூரில் இருந்து உப்பட்டி செல்லும் சாலையில் உலா வந்ததால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அச்சத்தில் ஓட்டம் பிடித்தனர். சம்பவ இடத்திற்கு பிதர்காடு வனத்துறையினர் சென்று பொதுமக்கள் உதவியுடன் சாலையில் சென்ற காட்டு யானையை அருகே உள்ள வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். காட்டு யானைகள் சாலையில் நடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: