×

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்.!

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 26ம் தேதி நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு மசோதா கொண்டுவருவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்த, ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின்னர், ஆளுநரிடம் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் பிரகடனப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. பொதுமக்களிடம் கேட்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், சட்டத்துறையின் ஆலோசனை பெற்று அவசர சட்டம் தயாரிக்கபடும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். தடையை மீறி ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் ஈடுபடும் நபர்களுக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க மசோதா வழி செய்கிறது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் பணத்தை இழந்து இளைஞர்கள் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவங்கள் அதிகரித்து வந்தது. இதையடுத்து, தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Governor ,R.R. N.N. Ravi , Governor RN Ravi approves Tamil Nadu government's emergency law banning online gambling.
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...