×

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு; எஸ்கலேட்டரில் சிறுவனின் கைவிரல்கள் சிக்கி நசுங்கியது: குடும்பத்தினரின் அந்தமான் பயணம் ரத்து

சென்னை: அந்தமான் விமானத்தில் பயணிக்க தாத்தா, பாட்டியுடன் எஸ்கலேட்டரில் சென்ற 4 வயது பேரன், கை விரல்கள் எஸ்கலேட்டரில் எதிர்பாராதவிதமாக சிக்கி நசுங்கியது. இதனால் அந்த குடும்பத்தினர், அந்தமான் பயணத்தை ரத்து செய்துவிட்டு, குரோம்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பேரனை அழைத்துச் சென்றனர்.

அந்தமானை சேர்ந்தவர் ஐசக். இவர், தீபாவளி விடுமுறையில் மனைவி மகன், பேரக் குழந்தையுடன் தமிழ்நாட்டிற்கு உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். விடுமுறை முடிந்து நேற்று குடும்பத்துடன் அந்தமான் திரும்ப முடிவு செய்தனர். அதன்படி நேற்று பகல் 12.05 மணிக்கு சென்னையில் இருந்து தனியார் பயணிகள் விமானத்தில் அந்தமான் செல்ல சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தனர். போர்டிங் பாஸ் வாங்கிவிட்டு, பாதுகாப்புச் சோதனை உள்பட அனைத்து சோதனையும் முடித்தனர்.

பின்னர் விமானத்தில் ஏற எஸ்கலேட்டர் மூலம் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஐசக்கின் 4 வயது பேரன் ஜெய்டன் இடது கை விரல்கள் எதிர்பாராதவிதமாக எஸ்கலேட்டரில் சிக்கி நசுங்கின. உடனடியாக அவசர அவசரமாக, விமான ஊழியர்கள் எஸ்கலேட்டரை நிறுத்தினர். அதோடு சிறுவன் ஜெய்டன் உள்பட ஐசக்  குடும்பத்தினரை, எஸ்கலேட்டர் இருந்து இறக்கினர்.  

சென்னை விமான நிலைய மருத்துவர்கள் விரைந்து வந்து சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால்தான் நல்லது என்று பரிந்துரைக்கப்படது. அதன்படி ஐசக், தன்னுடைய குடும்பத்தினரின் அந்தமான் பயணத்தை ரத்து செய்துவிட்டு, குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிறுவனை சிகிச்சைக்காக சேர்த்தனர்.   

இந்த சம்பவம் காரணமாக அந்தமான் செல்ல வேண்டிய தனியார் பயணிகள் விமானம் 40 நிமிடங்கள் தாமதமாக பகல் 12.45 மணிக்கு சென்னையிலிருந்து அந்தமான் புறப்பட்டுச்சென்றது. இதனால் சென்னை விமான நிலையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.

Tags : Chennai Airport ,Andaman , Confusion at Chennai Airport; Boy's fingers crushed in escalator: Family's Andaman trip cancelled
× RELATED சென்னை விமான நிலையத்தில் டிஜியாத்ரா திட்டம் அறிமுகம்: வரும் 31ம் தேதி அமல்