அமெரிக்க சபாநாயகர் கணவர் மீது தாக்குதல்: மருத்துவமனையில் அனுமதி

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் கணவர் பால் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, சான்பிரான்சிஸ்கோவில் உள்ள வீட்டில் விடுமுறையை தனது குடும்பத்தினருடன் கழித்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை வீட்டை விட்டு புறப்பட்ட பெலோசியின் கணவர் பால் திடீரென மர்ம நபரால் தாக்கப்பட்டார். இதில் காயமடைந்த அவர் அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

காயமடைந்து கீழே கிடந்த போது உதவியவர்களுக்கும், மருத்துவர்களுக்கும் சபாநாயகரும் அவரது குடும்பத்தினரும் நன்றி தெரிவித்துள்ளனர். பால் தாக்கப்பட்ட நேரத்தில் பெலோசி வீட்டில் இல்லை. அவர் மீதான  தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அமெரிக்காவின் பலம் வாய்ந்த அரசியல் தலைவர்களில் ஒருவராக பெலோசி விளங்குகிறார். சமீபத்தில் சீனாவின் கடும் மிரட்டல், எச்சரிக்கையும் மீறி, தைவானுக்கு சென்று உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

Related Stories: