அபியர்டோ ஓபன் டென்னிஸ் லெய்லா அதிர்ச்சி தோல்வி

டாம்பிகோ: மெக்சிகோவில் நடைபெறும் அபியர்டோ ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், கனடா நட்சத்திரம் லெய்லா பெர்னாண்டஸ் அதிர்ச்சி தோல்வி கண்டார். காலிறுதியில் சக கனடா வீராங்கனை ரெபக்கா மரினோவுடன் (31 வயது, 72வது ரேங்க்) மோதிய லெய்லா (20 வயது, 40வது ரேங்க்) 3-6, 3-6 என்ற நேர் செட்களில் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

இப்போட்டி 1 மணி, 8 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இந்த தொடரின் முதல் நிலை வீராங்கனையாகக் களமிறங்கிய எலிஸ் மெர்டன்ஸ் (26 வயது, 30வது ரேங்க்), போலந்தின் மாக்தா லினெட்டிடம் (30 வயது, 55வது ரேங்க்) 5-7, 2-6 என்ற நேர் செட்களில் மண்ணைக் கவ்வினார்.

முன்னணி வீராங்கனைகளான செக் குடியரசின் கேத்தரினா சினியகோவா, கொலம்பியாவின் கமிலா ஒசாரியோ ஆகியோரும் காலிறுதியில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தனர். அரையிறுதி ஆட்டங்களில் லினெட் - மரினோ, லின் ஸூ - எலிசபெத்தா கோக்சியரெட்டோ மோதுகின்றனர்.

Related Stories: