×

பிரதமர் மோடி விருப்பம் ஒரே நாடு; ஒரே போலீஸ் சீருடை

சூரஜ்கண்ட்: குற்றங்களை தடுக்க ‘ஒரே நாடு, ஒரே போலீஸ் சீருடை’ கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இது ஒரு யோசனைதான் என்றும் இதை மாநிலங்கள் மீது திணிக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.
அரியானா மாநிலம், சூரஜ்கண்டில் மாநில உள்துறை அமைச்சர்களின் 2 நாள் மாநாடு நடந்தது. மாநாட்டின் இறுதி நாளான நேற்று பிரதமர் மோடி கலந்து கொண்டு காணொலி வாயிலாக பேசியதாவது: நாடு முழுவதும் காவல்துறையினருக்கு ஒரே மாதிரியான சீருடை தேவை. ஒரே நாடு; ஒரே சீருடை என்பது காவல்துறைக்கு வழங்கக் கூடிய ஒரு யோசனைதான். இதை நான் உங்கள் மீது (மாநிலங்கள்) திணிக்க முயற்சிக்கவில்லை. மாநிலங்களுக்கு வெவ்வேறு எண்கள் மற்றும் சின்னங்கள் இருக்கலாம், ஆனால், இந்த திட்டம் சாத்தியமா? இது மாநிலங்கள், காவல்துறைகளுக்கு இடையே விவாதிக்கக் கூடிய விஷயமா? என்பதை சிறிது யோசித்துப் பாருங்கள்.

அடுத்த 5, 50 அல்லது 100 ஆண்டுகளில் இந்த யோசனை நடைமுறைக்கு வரலாம். நாடு முழுவதும் உள்ள காவல்துறையின் அடையாளம் ஒரே மாதிரியாக இருக்கும் என்று கருதுகிறேன். நக்சலிசம் என்பது இளைஞர்களை தவறாக வழி நடத்துகிறது. இளம் வயது நபர்களை தவறாக திசை திருப்பும் சக்திகளை வேரோடு அழிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு என்பது மாநில விவகாரம் என்றாலும், அவை நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டுடன் சமமாக தொடர்புடையது. மாநிலத்துக்கு மாநிலம் குற்றங்களின் தன்மை மாறி வருகிறது. எல்லை தாண்டிய குற்றவாளிகள், தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

* உலக இரும்பு துறையில்...
இந்தியாவுக்கு 2ம் இடம்குஜராத் மாநிலம், சூரத் மாவட்டம், ஹசிராவில் ஆர்சிலெர் மிட்டல் நிப்பான் இரும்பு ஆலை விரிவாக்கத்தின் பூமி பூஜை விழாவில் காணொலி மூலமாக பங்கேற்று மோடி நேற்று பேசுகையில், ‘இன்னும் 9 முதல் 10 ஆண்டுகளில் நாட்டில் கச்சா இரும்பு உற்பத்தி வருடத்துக்கு 15 கோடி 40 லட்சம் டன் என்பதில் இருந்து  30 கோடி டன்னாக அதிகரிக்கும். அனைவரின் கடுமையான உழைப்பின் காரணமாக கடந்த 8 ஆண்டுகளில் இந்திய இரும்பு துறை உலகின் 2வது பெரிய தொழில்துறையாக உருவெடுத்துள்ளது,’ என்றார்.

* செய்திகளை ஆராய்ந்து பார்வர்டு செய்யுங்கள்
மாநாட்டில் மோடி மேலும் பேசுகையில், ‘‘ஒரு போலி செய்தி நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தும். ஒரு செய்தியை அனைவருக்கும் ‘பார்வர்டு’ செய்யும் முன், அது குறித்து தீவிரமாக ஆராய்ந்து அதை உறுதி செய்த பின் தகவலை அனுப்ப வேண்டும்,’ என தெரிவித்தார்.

Tags : Modi , Prime Minister Modi's desire is one country; A single police uniform
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...