×

ப்ரோக்கோலி பொரியல்

செய்முறை :

முதலில் ப்ரோக்கோலியை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். மிளகாயை இரண்டாக கிள்ளிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் கொத்தமல்லித் தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டை நசுக்கிக் கொள்ளவும். ப்ரோக்கோலியை ஐந்து நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்த பின் மிளகாய், இஞ்சி, பூண்டு மற்றும் சிறிது கொத்தமல்லித் தழையை போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் அடுத்து அதில் வெங்காயம் மற்றும் சிறிது உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு அதில் வேக வைத்த ப்ரோக்கோலியை போட்டு தேவையான உப்பு சேர்த்து 5 நிமிடம் பிரட்டி எடுக்கவும். சுவையான சத்தான பொரியல் ரெடி. ப்ரோக்கோலி அதிகம் வேக கூடாது. அதிகம் வெந்தால் அதில் உள்ள சத்துக்கள் போய் விடும்.

Tags :
× RELATED பலாப்பழத்தின் பயன்கள்!