மோடி மனசு வைத்தால் தான் ஓபிஎஸ்-இபிஎஸ் சேர முடியும்: டிடிவி தினகரன் பேட்டி

தஞ்சை: தஞ்சையில் இன்று டிடிவி.தினகரன் அளித்த பேட்டி: தமிழகத்தில் தமிழ் தான் தாய்மொழி. ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மொழிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் எந்த மொழியையும் விரும்பி தான் ஏற்பார்கள். திணிப்பை விரும்ப மாட்டார்கள். 2024ல் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது. ஒரு கட்சி தமிழகத்தில் வெற்றி பெற தான் நினைப்பார்கள்.

1965 இந்தி திணிப்பு காரணத்தினால், காங்கிரஸ் ஆட்சி போனது. இதுவரை அவர்களால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. இதற்கு இந்தி திணிப்புதான் காரணம். பிரதமர் மோடி மனசு வைத்தால் தான் இபிஎஸ்-ஓபிஎஸ்ஐ இணைத்து வைக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: