×

செலவை சமாளிக்க முடியவில்லை; ‘பார்ட் டைம் ஒர்க்’கை தேடும் 47% அமெரிக்கர்கள்: பொருளாதார நெருக்கடியால் தடுமாற்றம்

நியூயார்க்: அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் 47% ஊழியர்கள் செலவை சமாளிக்க பார்ட் டைம் ஒர்க்கை தேடி வருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பது போன்று, அமெரிக்காவும் கடுமையான பொருளாதாரம் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. நாட்டின் பணவீக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் தங்களது அன்றாடச் செலவுகளைச் சமாளிக்கவும், தங்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

பாதிக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள், தங்களது வழக்கமான பணி நேரத்தை தவிர கூடுதலாக பகுதிநேர வேலைகளை தேடி வருகின்றனர். இதுதொடர்பாக மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனமான குவால்ட்ரிக்ஸ், புதிய ஆய்வு ஒன்றை நடத்தியது. அதன் முடிவில், ‘அமெரிக்காவில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், தங்கள் வருமானத்தை அதிகரிக்கவும், செலவுகளைக் குறைக்கவும் பல வழிகளையும் கையாண்டு வருகின்றனர்.

மளிகைப் பொருட்கள், வீட்டுவசதி மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவதால், அதனை எதிர்த்துப் போராடி வருகின்றனர். 1,000க்கும் மேற்பட்ட முழுநேர ஊழியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 38 சதவீத ஊழியர்கள் தங்களது ெபாருளாதா தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பார்ட் டைம் ஒர்க்கை தேடி வருவதாகவும், 14 சதவீதம் பேர் பார்ட் டைம் ஒர்க் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

நிறுவனங்களில் பணிபுரியும் பெற்றோர்களில் 70 சதவீதம் பேர் தங்களின் ஊதியம் செலவுகளுக்கு ஏற்றதாக இல்லை என்று கூறினர். மேலும் ஒட்டுமொத்த ஊழியர்களில் 47 சதவீதம் பேர் பார்ட் டைம் ஒர்க்கை தேடி வருவதாக கூறியுள்ளனர். இதன்மூலம் அமெரிக்காவில் பணியாற்றும் ஒட்டுமொத்த ஊழியர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்’ என்று தெரிவித்துள்ளது.


Tags : Americans , Couldn't afford the expense; 47% of Americans Seeking 'Part-Time Work': Stunned by Economic Crisis
× RELATED அமெரிக்காவில் இந்தியர் கடைகளை குறி வைத்து நகைகள் கொள்ளை