×

பழம்பெரும் அசாம் நடிகர் மரணம்: மோடி உள்ளிட்டோர் இரங்கல்

கவுகாத்தி: பழம்பெரும் அசாம் நடிகர் நிபோன் கோஸ்வாமிக்கு (80), கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது. அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அசாமின் தேஜ்பூர் நகரில் பிறந்த நிபோன் கோஸ்வாமி, 1957ம் ஆண்டில் அசாம் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். நூற்றுக்கணக்கான அசாமிய படங்களில் நடித்த அவர், சின்னத்திரை, விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். அவரது தந்தை சந்திரதர் கோஸ்வாமியும் பிரபல நடிகர் ஆவார். அவரது தாயார் நிருபமா கோஸ்வாமி சிறந்த பாடகி ஆவார். அவரது இறுதி சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என அசாம் அரசு அறிவித்துள்ளது.

Tags : Assam ,Modi , Legendary Assamese actor dies, Modi mourns
× RELATED ரேஷன் கார்டுக்கு ரூ.10 ஆயிரம் தருவதாக...