×

கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி: நாமக்கல் மண்டலத்தில் கோழி பண்ணையாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

நாமக்கல்: கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலியாக நாமக்கல் மண்டலத்தில் கோழி பண்ணையாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் பறவை காய்ச்சல் மீண்டும் பரவி வருகிறது. இதனால் அங்குள்ள பறவைகள் நோயினால் பாதிக்கப்பட்டு இறக்கின்றன. பறவை காய்ச்சல் பீதியால் தமிழகத்தில் உள்ள கோழிப்பண்ணையாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோழி பண்ணைகளில் கிருமி நாசினி மருந்து தெளித்து வருகின்றனர். தமிழகத்தில் குறிப்பாக நாமக்கல் மண்டல பகுதிகளான கரூர் நாமக்கல் ஈரோடு சேலம் கிலோமீட்டர் மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகிறது.

இங்கிருந்து கறிக்கோழி மட்டும் முட்டைகள் பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அண்டை மாநிலமான கேரளத்தில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் நாமக்கல் பகுதியில் உள்ள கோழி பணியாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாங்கள் வளர்த்து வரும் கோடிகளுக்கு கிருமி நாசினி மருந்து தெளிப்பதை விரைந்து செயல்படுத்தி வருகின்றனர்.

Tags : Kerala ,Namakkal , Avian flu echoes in Kerala: Poultry farmers in Namakkal zone take precautions
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...