கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தில் போலீசாரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என என்ஐஏ கூறியுள்ளது: அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

தூத்துக்குடி: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தில் போலீசாரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என என்ஐஏ கூறியுள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். கோவை கார் வெடிப்பு தொடர்பாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், போலீசாருடன் இணைந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டில் தீவிரவாத செயலை அனுமதிக்க முடியாது. 2019ல் என்.ஐ.ஏ. விசாரணை வளையத்தில் இருந்த முபின் ஏன் விடுவிக்கப்பட்டார் என்பது அப்போது இருந்த அதிகாரிகளுக்கே தெரியும்.

கோவை சம்பவத்தில் தொடர்புடையவர்களின் முழு விவரங்களும் 4 நாட்களில் திரட்டி என்.ஐ.ஏ.வுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கை தமிழ்நாடு போலீஸ் சிறப்பாக கையாண்டுள்ளது. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்றும் வரை ஒன்றிய உளவுத்துறைக்கு தகவல் அளித்தோம் என்று அமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து, என்.ஐ.ஏ. விசாரணை தாமதமானதாக கூறப்பட்ட ஆளுநரின் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, கோவை கார் வெடிப்பு வழக்கை 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை என்.ஐ.ஏ. உடன் இணைந்தே தமிழக காவல்துறை விசாரணை செய்தது என்று கூறினார்.

முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் அடிப்படையில் புலனாய்வு விசாரணை நடைபெற்றது. கார் வெடிப்பில் இறந்த ஜமேஷா முபின் 2019ம் ஆண்டே என்.ஐ.ஏ.வால் விசாரிக்கப்பட்டவர். ஜமேஷா முபினை என்.ஐ.ஏ. ஏன் விடுவித்தது என்று எங்களுக்கு தெரியாது. முதற்கட்ட விசாரணை மேற்கொள்ள வேண்டியது மாநில காவல்துறை பொறுப்பு என்று அமைச்சர் தெரிவித்தார்.

Related Stories: