கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தில் போலீஸின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என என்.ஐ.ஏ. கூறியுள்ளது: அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

தூத்துக்குடி: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தில் போலீஸின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என என்.ஐ.ஏ. கூறியுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளது. போலீஸாருடன் இணைந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தினை பொறுத்தவரையில், எல்லா விசாரணைகளுக்கும் அரசு முழு ஒத்துழைப்பு அளித்து அனைத்து விசாரணை ஆவணங்களையும் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைத்துள்ளது. எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டில் தீவிரவாத செயலை அனுமதிக்க முடியாது; இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களின் முழு விவரங்களும் 4 நாட்களில் திரட்டி என்.ஐ.ஏ.வுக்கு கொடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது.

Related Stories: