ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளம்: லா நினா காரணமாக 3வது முறையாக வெள்ளம்

கான்பரா: ஆஸ்திரேலியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள 516 மில்லியன் அமெரிக்கன் டாலர் தொகையினை ஒதுக்கியுள்ளது அந்நாட்டு அரசு. காலநிலை மாற்றத்தால் ஆஸ்திரேலியாவில் பெரும்பாலான பகுதிகளில் வரலாறு காணாத அளவிற்கு மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடுமையாக பாதிப்படைந்துள்ளது. வடமேற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் பாயும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் பலரும் வீட்டின் மொட்டை மாடிகளிலும், மேற்கூரைகளிலும் தஞ்சம் அடைந்தன.

வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்களை படகுகளின் மூலம் மீட்கும் பணி துரித நேரத்தில் நடைபெற்றன.

இந்நிலையில், வெள்ள நிவாரண பணிகளுக்காக 516 மில்லியன் அமெரிக்கன் டாலர் தொகையை ஒதுக்கி உள்ளது அந்நாட்டு அரசு. பசுபிக் பெருங்கடலில் ஏற்பட்ட லா நினா நிகழ்வின் காரணமாக வெப்பநிலை 3 டிகிரி அளவிற்கு குறைந்ததால் ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகள் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த வருடம் 3-வது முறையாக ஆஸ்திரேலியா கடுமையான வெள்ளப்பெருக்கை சந்திக்கிறது. 

 

Related Stories: