பாகிஸ்தானில் மீண்டும் தேர்தல் நடத்தக் கோரி இம்ரான்கான் பேரணி: லாகூரில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி கட்சியினருடன் அணிவகுப்பு

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் மீண்டும் தேர்தல் நடத்தக் கோரி முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் லாகூரில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி பேரணி தொடங்கியுள்ளார். பிரதமராக இருந்த போது விலை உயர்ந்த வெளிநாட்டு பரிசு பொருட்களை சட்ட விரோதமாக விற்பனை செய்த புகாரில் இம்ரான்கானை அந்நாட்டு தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்தது. அண்மையில் நடந்த இடைதேர்தலில் வெற்றி பெற்றும் இம்ரான்கான் நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்கவும் தடை விதித்தது. இந்த நிலையில் மீண்டும் தேர்தல் நடத்த கோரி இம்ரான்கான் லாகூரிலிருந்து பேரணி தொடங்கியுள்ளார்.

நாட்டை ஆளும் திருடர்களிடமிருந்து காப்பாற்ற நடைபெறும் ஜிகர் இது என இம்ரான் கூறியுள்ளார். தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அவருடன் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். இம்ரான்கான் ஏற்கனவே நடத்திய பேரணிகளின் போது வன்முறை வெடித்ததால் பாதுகாப்பிற்காக லாகூர் முதல் இஸ்லாமாபாத் வரை 13,000 போலீசார் 8,000 துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.  

Related Stories: