×

திருத்தணி அருகே ஓட்டுநர், நடத்துநர் மீது பள்ளி மாணவர்கள் தாக்குதல்: படியில் பயணித்ததை தட்டி கேட்டதால் ஆத்திரம்..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே படியில் தொங்கியபடி பயணித்ததை தட்டி கேட்ட அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது பள்ளி மாணவர்கள் தாக்குதல் நடத்தினர். திருத்தணியில் இருந்து காலையில் வழக்கம் போல அத்திமாஞ்சேரி பேட்டை நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. கே.ஜி. கண்டிகை நிறுத்தத்தில் பள்ளி மாணவர்கள் பேருந்தில் ஏறினர். பேருந்தில் இருக்கைகள் காலியாக இருந்தபோதும், மாணவர்கள் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்ததால் ஓட்டுநர் அவர்களை உள்ளே வருமாறு அழைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், ஓட்டுநர் ஹேமாத்ரியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதனை தட்டிக்கேட்ட நடத்துனரையும் தாக்கிய மாணவர்கள், உடனடியாக அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில், திருத்தணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே பேருந்து நிறுத்தத்தில் கடந்த வாரம் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது பள்ளி மாணவர்கள் தாக்குதல் நடத்தியதால் ஒன்றரை மணி நேரமாக பேருந்து நிறுத்தப்பட்டது. அதே இடத்தில் மீண்டும் அப்படியொரு சம்பவம் நடைபெற்றிருப்பதால் அப்பகுதியில் பேருந்துகளை இயக்க ஓட்டுநர்களும், நடத்துனர்களும் அச்சப்படுவதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : Tiruthani , Reverend, Driver, Conductor, School Students, Assault
× RELATED சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் போக்சோவில் 17 வயது சிறுவன் கைது