×

சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மாநில அரசுகளின் பொறுப்பு: உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

ஹரியானா: ஹரியானா மாநிலம் சூரஜ் குண்டில் இரண்டு நாட்கள் உள்துறை அமைச்சர்கள் மாநாடு என்பது நேற்று தொடங்கிய நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு மாநிலங்களில் முதல்வர்கள் நேரடியாக கலந்து கொண்டிருக்கிறார்கள். உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்உட்பட பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொண்டிருக்க கூடிய நிலையில், தமிழகத்தின் சார்பில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டுள்ளார்.

நேற்றைய தினம் இந்த மாநாட்டின் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒவ்வொரு மாநிலத்திலும் NIA கிளை என்பது விரைவில் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.  இதைத்தொடர்ந்து இன்றைய தினம் டெல்லியில் இருந்து காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி, சட்டம் ஒழுங்கு பற்றிய மிக முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்து இருக்கிறார். அதாவது சட்டம் மற்றும் ஒழுங்கு மாநிலத்தின் பொறுப்பு என்பதை தற்போது வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.
 
சட்டம், ஒழுங்கு மாநிலங்களின் பொறுப்பு என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இது நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம் சூரஜ்குந்ததில் அனைத்து மாநில உள்துறை அமைச்சார்களின் சிந்தனை முகாமில் காணொலி மூலம் பிரதமர் மோடி கூறியுள்ளார்.  

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பண்டிகைகளின்போது நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்துவது மாநிலங்களின் கடமை ஆகும் . உள்நாட்டு பாதுகாப்பு விஷயங்களில் புதிய கொள்கைகளை உருவாக்குவதில் முயற்சியே சிந்தனை முகாம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். நாடு முன்னேறும் பொது வளர்ச்சி பலன்கள் கடைசி நபருக்கும் சென்றடைவதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஒவ்வொரு மாநிலங்களும் ஒன்றிணைந்து கற்றுக்கொண்டு நாட்டின் முன்னேற்றத்துக்காக செய்யப்படுவதே மக்களுக்கு நாம் ஆற்றும் கடமை ஆகும் என்று பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் உரையாற்றியுள்ளார்.


Tags : PM ,Modi ,Home Ministers Conference , Responsibility of state governments to maintain law and order: PM Modi's speech at Home Ministers Conference
× RELATED வரவிருக்கும் தமிழ் புத்தாண்டு...