இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சிறப்பானது: பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பாராட்டு

மாஸ்கோ : பிரதமர் மோடி போன்ற உலக தலைவர்கள் நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு தங்கள் வெளிநாட்டு கொள்கையை சிறப்பாக கடைப்பிடித்து வருவதாக ரஷ்ய அதிபர் புதின் புகழாரம் சூட்டி இருக்கிறார். ரஷ்ய தலைநகரம் மாஸ்கோவில் நடைபெற்ற கருத்தரங்க ஒன்றில் உரையாற்றிய அதிபர் புதின் வெளியுலக வர்த்தகத்தில் இந்தியாவிற்கு சிறந்த எதிர்காலம் இருப்பதாக கணித்திருக்கிறார். மறுபுறத்தில் அமெரிக்க டாலர் மீது நம்பிக்கை வைப்பதை குறைத்தால் அதை செய்யும் பிறநாடுகளின் சர்வதேச வர்த்தக முன்னோக்கி செல்லும் என்ற யோசனை தெரிவித்துள்ளார்.  

சர்வதேச பணபரிமாற்ற அம்சங்களை உள்ளடக்கிய புதிய சர்வதேச பொருளாதார தளம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று உலக நாடுகளை அதிபர் புதின் கேட்டுக்கொண்டுள்ளார். புதிய பொருளாதார தளம் அல்லது புதிய பொது நாணயம் என்பது ஒரு நாட்டின் தேசிய எல்லைக்கு வெளியே உள்ளதும், பாதுகாப்புள்ளதும், அரசியல் நீக்கம் செய்யப்பட்டதும் , தன்னிச்சையாக இயங்கக்கூடியதும், ஏதேனும் ஒரு கட்டுப்பட்டு மையத்தை சார்ந்திராத ஒன்றாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

சர்வதேச பொது பொருளாதார தளம் அல்லது புதிய பொது நாணயத்தை உருவாக்க கடுமையான முயற்சிகள் தேவைப்படும் என்றும், மற்றும் பல நாடுகளின் கூட்டு முயற்சியும் தேவைப்படும் என்று புதின் கூறியுள்ளார். அமெரிக்க டாலர் மற்றும் இருப்புள்ள கரன்சிகள் என்று சொல்லிக்கொள்கிற பிற நாடுகளின் கரன்சிகள் இல்லாமலே மற்ற நாடுகள் லாபம் ஈட்ட முடியும் என்ற யோசனை தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு மிகப்பெரிய எதிர்காலம் இருப்பதாகவும், வெளியுறவு விவகாரத்தில் இந்தியா மிக பெரிய பங்காற்றும் என புதின் கூறியுள்ளார்.      

Related Stories: