×

அழியும் கலைக்கு புத்துயிர் கொடுக்கும் அனுமேட்ரானிக்ஸ் தொழில்: மலேசிய மக்களை கவரும் டிஜிட்டல் நிழல் பொம்மலாட்டம்

கோலாலம்பூர்: மலேசியாவில் ரோபோடிக் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பொம்மலாட்டத்திற்கு புத்துயிர் கொடுக்கப்பட்டுள்ளது. பொம்மலாட்டம் இதில் பலவகை உண்டு. வெள்ளை துணி விரிப்பின் பின்புறமாக ஒளியின் உதவியுடன் காட்டப்படும் நிழல் உருவமே பொம்மலாட்டம். இந்தியாவில் மட்டுமின்றி தென்கிழக்கு ஆசியா, மலேசியா, இந்தோனேசியாவிலும் பொம்மலாட்டம் பிரபலமானது. இதை திரைக்கு பின்னே தோலால் செய்யப்பட்ட பொம்மைகள் கயிறுகள் மூலம் ஆட்டுவிக்கப்படும். இசை, மத்தளம், புல்லாங்குழல் போன்ற இசை கருவிகள் பொம்மலாட்டத்திற்கு இனிமை சேர்க்கும்.

கால வெள்ளத்தில் அழிந்து வரும் பொம்மலாட்டத்தில் நவீனத்தை புகுத்தி அந்த கலைக்கு புத்துயிர் ஊட்டி இருக்கிறார்கள் மலேசிய கலைஞர்கள். பினாங்கு தீவில் உள்ள வணிக வளாகத்தில் ரோபோடிக் தொழிநுட்பத்தை மூலம் பொம்மலாட்டத்தை அரங்கேற்றி வருகின்றனர். அனுமேட்ரானிக்ஸ் தொழில் நுட்பத்தின் மூலம் ரோபோக்களை உருவாக்கி அதன் மூலம் பொம்மலாட்டம் நடத்தப்படுகிறது.

3D தொழில் நுட்பத்தின் மூலம் கதாபாத்திரங்களின் உருவங்கள் உருவாக்கப்பட்டு அவை அனுமேட்ரானிக்ஸ் தொழில் நுட்பத்தின் மூலம் இயக்கப்படுகின்றன. இத்தனை ஆண்டுகளுக்கு பின் நவீன தொழில் நுட்பத்தின் மூலம் பொம்மலாட்ட கலைக்கு புத்துயிர் ஊட்டப்பட்டிருப்பது பொம்மலாட்ட கலைஞர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன் மூலம் பொம்மலாட்ட கலை இளைஞர்களை கவர்ந்து எக்காலத்திற்கு நிலைக்கும் என்ற நம்பிக்கை பிறந்திருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.


Tags : Malaysians , perishable, art, anumatronics, Malaysian, digital, shadow, puppetry
× RELATED மலேசியாவில் சிக்கியுள்ள 350...