×

பள்ளியில் இருந்து வீடு திரும்பிய தொழிலதிபரின் மகன் ஆட்டோவில் கடத்தல்; சிசிடிவி பதிவு மூலம் போலீசார் விசாரணை

சென்னை: சென்னை கொண்டிதோப்பு பகுதியை சேர்ந்த அரவிந்த் சர்மா. தொழிலதிபரான இவர், கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எனது 12 வயது மகன், கீழ்ப்பாக்கத்தில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். வழக்கமாக வீட்டில் இருந்து பள்ளிக்கு ஆட்டோவில்  செல்வது வழக்கும். அதன்படி நேற்று முன்தினம் காலை ஆட்டோ மூலம் எனது மகன் பள்ளிக்கு சென்றான். பின்னர் பள்ளி முடிந்து மாலை 3 மணியளவில் பள்ளி எதிரே ஆட்டோவிற்காக காத்திருந்தார்.  அப்போது வழக்கமாக அவரை அழைத்து செல்வதற்காக வரும் ஆட்டோ தாமதமானது. இதற்கிடையில் ராமுவை மற்றொரு வந்த 2 பேர் ராமுவை வலுகட்டயமாக ஆட்டோவில் கடத்தி சென்றனர்.

மேலும் சத்தம் போடக்கூடாது என்று ஆட்டோவிற்குள்ளே கடுமையாக தனமாக தாக்கியுள்ளனர். இதற்கிடையில் ஆட்டோ பச்சையப்பன் கல்லூரி சிக்னலில் நின்ற போது என் மகன் அவர்களிடம் இருந்து தப்பித்து, கீழ்ப்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் சென்றுள்ளான். அப்போது நடந்த சம்பவம் குறித்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் கூறியுள்ளான். பிறகு போலீசார் அவனை மீட்டு சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். பின்னர் ரயில்வே போலீசார் எனக்கு தகவல் அளித்தனர். அதன்படி காவல் நிலையத்திற்கு சென்று என்னுடைய மகனை வீட்டிற்கு அழைத்து வந்தேன். எனவே எனது மகனை கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கீழ்ப்பாக்கம் போலீசார் மாணவன் படிக்கும் பள்ளி அருகே பொருத்தப் பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவு மற்றும் ஆட்டோவில் இருந்து தப்பியதாக கூறப்பட்ட பச்சையப்பன் கல்லூரி சிக்னல் அருகே பொருத்தப்பட்ட கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது அதுபோன்று சம்பவங்கள் நடந்ததாக தெரியவில்லை. பிறகு கீழ்ப்பாக்கம் போலீசார் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட தொழிலதிபரின் வீட்டிற்கு சென்று அவருடைய மகனிடம் விசாரணை நடத்தினர். அப்போது கடத்தியதாக கூறப்பட்ட பள்ளி மாணவன் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் குழப்பம் அடைந்த போலீசார் மாணவன் உண்மையாகவே கடத்தப்பட்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Businessman , Businessman's son abducted in auto after returning home from school; Police investigation through CCTV recording
× RELATED ரூ.111 கோடி போதை பொருள் பதுக்கிய தொழிலதிபர் கைது