பழங்குடியினர் நல வாரிய உறுப்பினர்களுக்கு கல்வி, திருமண உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும்; தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பழங்குடியினர் நல வாரிய உறுப்பினர்களுக்கு கல்வி, திருமண உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் டி.எஸ்.ஜவஹர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2022-2023ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்  கயல்விழி செல்வராஜ், “பழங்குடியினர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் இயற்கை மரண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை மற்றும் திருமண உதவித்தொகை ஆகியன இதர நல வாரியங்களால் வழங்கப்பட்டு வரும் உதவித்தொகைக்கு இணையாக உயர்த்தி வழங்கப்படும்” என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், பழங்குடியினர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு இயற்கை மரண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை மற்றும் திருமண உதவித்தொகை ஆகிய உதவித்தொகைகள் இதர நல வாரியங்களில் வழங்கப்பட்டு வரும் உதவித்தொகைக்கு இணையாக உயர்த்தி வழங்கப்படுகிறது. உயர் த்தி வழங்கப்பட்ட தொகை  பழங்குடியினர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு சென்றடைய உரிய  நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: