அபிநயாவுடன் விஷால் காதலா?

சென்னை: நடிகை அபிநயாவை விஷால் காதலிப்பதாக கோலிவுட்டில் தகவல் பரவியுள்ளது. நாடோடிகள் படத்தில் சசிகுமாரின் தங்கையாக நடித்தவர் அபிநயா. இவர் வாய் பேச முடியாதவர். தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறார். சில படங்களில் ஹீரோயினாகவும் நடிக்கிறார். ஹரி இயக்கத்தில் பூஜை படத்தில் விஷால் நடித்தார். இதில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்தார். மற்றொரு முக்கிய வேடத்தில் அபிநயா நடித்தார். அப்போது விஷாலுக்கும் அபிநயாவுக்கும் காதல் ஏற்பட்டதாகவும் இப்போது மார்க் ஆண்டனி படத்தில் அபிநயாவுக்கு விஷால் ஹீரோயின் வாய்ப்பு தந்திருப்பதாகவும் கோலிவுட்டில் தகவல் பரவியுள்ளது.

விஷாலுக்கு 45 வயதாகிறது. அவரது குடும்பத்தினர் திருமணத்துக்கு வற்புறுத்தி வருகிறார்கள். காதல் திருமணம் செய்வதில் பிடிவாதமாக இருக்கும் விஷால், அபிநயாவை காதலிப்பதாக சொல்லப்படுகிறது. இது பற்றி விஷால் தரப்பில் கேட்டபோது பதில் எதுவும் கூறவில்லை. அபிநயா தரப்பில் கேட்டபோது, ‘மார்க் ஆண்டனி படத்தில் விஷாலின் மனைவியாக அபிநயா நடிக்கிறார். அதில் திருமண காட்சி இடம்பெறுகிறது. அதை வைத்து இருவருக்கும் திருமணம் என யாரோ புரளி கிளப்பியுள்ளனர். இதில் உண்மை இல்லை’ என்றனர்.

Related Stories: