×

தொழிற்பயிற்சி நிலையங்களில் அகில இந்திய துணை தொழிற்தேர்வு: தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: 2014 முதல் 2017 வரை பருவமுறையில் பயிற்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர்களுக்கு துணைத் தேர்வு எழுத (1+4) 5 வாய்ப்புகள் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக ஒரு அரிய வாய்ப்பும், 2018 முதல் 2021 வரை ஆண்டு முறையில் பயிற்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர்களுக்கு துணைத் தேர்வு எழுத கூடுதலாக ஒரு வாய்ப்பும் டிஜிடியால் வழங்கப்பட்டுள்ளது. எனவே, கருத்தியல், பணிமனை கணித அறிவியல் மற்றும் வேலைவாய்ப்புத் திறன் ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெறாத முன்னாள் பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற தொழிற்பயிற்சி நிலையங்களை வருகிற 10ம் தேதிக்குள் தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான தேர்வுக் கட்டணத்தை தொழிற்பயிற்சி நிலைய வழிகாட்டுதலின்படி Portal payment link-ல் செலுத்தி, இந்த வாய்ப்பினை பயன்படுத்தி துணைத்தேர்வை சிபிடி முறையில் எழுதி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Tags : Vocational Training Institutes ,Tamil ,Nadu , All India Sub Vocational Examination in Vocational Training Institutes: Tamil Nadu Govt Information
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...