×

திண்டுக்கல்லுக்கு நவ.11ல் பிரதமர் வருகை?

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகே காந்திகிராம பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு வரும் நவ.11ம் தேதி நடைபெறவுள்ள 36வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி, சிறப்புரையாற்ற உள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் பல்கலைக்கழத்தில் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு  வெளியாகவில்லை. நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் மாவட்ட கலெக்டர் விசாகன் காந்திகிராமம் அருகே ஹெலிகாப்டர் இறங்கும் தளம், பட்டமளிப்பு விழா அரங்கம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

Tags : Dindigul , Prime Minister's visit to Dindigul on November 11?
× RELATED லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து