×

தேவர் ஜெயந்தி விழாவிற்கு வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களின் வழித்தடங்கள் அறிவிப்பு

ராமநாதபுரம்:  அக். 30-ம் தேதி நடைபெறும் பசும்பொன் தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவிற்கு வெளிமாவட்ட வாகனங்கள் வந்து செல்லும் வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளதாவது:
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் வரும் 30ம் தேதி தேவர் குருபூஜை விழா நடக்க உள்ளது. விழாவில் பங்கேற்க வரும் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர் மாவட்ட வாகனங்கள், காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும். இந்த மாவட்ட வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக ராமநாதபுரம் வரக்கூடாது. சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் மாவட்ட வாகனங்கள் திருச்சி, மதுரை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும்.

கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட வாகனங்கள், திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும். மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்ட வாகனங்கள் மதுரை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும்.

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட வாகனங்கள் அருப்புக்கோட்டை, எம்.ரெட்டியபட்டி, மண்டப சாலை, க.விலக்கு, கண்ணார்பட்டி, கமுதி வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும். (அல்லது) தூத்துக்குடி, சூரங்குடி, சாயல்குடி, கோவிலாங்குளம், கமுதி வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும்.
விருதுநகர் மாவட்ட வாகனங்கள் அருப்புக்கோட்டை, எம்.ரெட்டியபட்டி, மண்டப சாலை, க.விலக்கு, கண்ணார்பட்டி, கமுதி வழியாக பசும்பொன் வந்து அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும்.

சிவகங்கை மாவட்ட வாகனங்கள் சிவகங்கை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.


Tags : Devar Jayanti Festival , Devar Jayanti Festival, Routes of Vehicles, Collector Notification
× RELATED தேவர் ஜெயந்தி விழா!: பசும்பொன்...