×

கர்மாவின் அடிப்படையில் நீதிமன்றம் செயல்படவில்லை: ஐகோர்ட் நீதிபதிகள் திட்டவட்டம்

சென்னை: கர்மாவின் அடிப்படையில் நீதிமன்றம் செயல்படவில்லை என உயர்நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். காவலரின் பணியிட மாறுதலை கர்மா அடிப்படையில் ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான வழக்கில் இரு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மதுரை காவலர் ஸ்ரீமுருகன் தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டதை கர்மா அடிப்படையில் ஐகோர்ட் நீதிபதி ஸ்ரீமதி ரத்து செய்தார். உத்தரவை எதிர்த்து காவல்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.


Tags : Karma , Karma, court, icourt judges
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்