அகில இந்திய தொழிற்தேர்வு: தேர்ச்சி பெறாத முன்னாள் பயிற்சியாளர்களுக்கு CBT முறையில் தேர்வு நடத்த DGT டெல்லியால் திட்டம்

டெல்லி: கைவினைஞர் பயிற்சி திட்டத்தின்கீழ் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய தொழிற்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் DGT டெல்லியால் நடத்தப்பட்டு வருகிறது.. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அகில இந்திய தொழிற்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு துணைத் தேர்வுகள் நடைபெறவில்லை.

தற்பொழுது, கருத்தியல், பணிமனை கணித அறிவியல் மற்றும் வேலைவாய்ப்புத் திறன் ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெறாத முன்னாள் பயிற்சியாளர்களுக்கு 25-11-2022 முதல் CBT முறையில் தேர்வு நடத்த DGT டெல்லியால் திட்டமிடப்பட்டுள்ளது. 2014 முதல் 2017 வரை பருவமுறையில் பயிற்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர்களுக்கு துணைத் தேர்வு எழுத 5 வாய்ப்புகள் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக ஒரு அரிய வாய்ப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

2018 முதல் 2021 வரை ஆண்டுமுறையில் பயிற்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர்களுக்கு துணைத் தேர்வு எழுத கூடுதலாக ஒரு வாய்ப்பும் DGT-யால் வழங்கப்பட்டுள்ளது. எனவே,, கருத்தியல் பணிமனை கணித அறிவியல் மற்றும் வேலைவாய்ப்புத் திறன் ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெறாத முன்னாள் பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற தொழிற்பயிற்சி நிலையங்களை 10.11.2022 -தேதிக்குள் தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான தேர்வுக் கட்டணத்தை தொழிற்பயிற்சி நிலைய வழிகாட்டுதலின்படி Portal  payment link-ல் செலுத்த வேண்டும்.

இந்நல்வாய்ப்பினை பயன்படுத்தி துணைத்தேர்வை CBT முறையில் எழுதி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், அகில இந்திய துணைத் தொழிற்தேர்வு நவம்பர் 2022, குறித்த தகவல்களை உடனுக்குடன் பெற ) மற்றும் ஆகிய இணையதளங்களில் பார்த்து தெரிந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Related Stories: