டி - 20 உலகக்கோப்பை கிரிக்கெட்: நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

சிட்னி: டி - 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 44 பந்துகளில் 62 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி வீரர்கள் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்காமல் 25 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். அடுத்ததாக களமிறங்கிய நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

Related Stories: