×

2.80 கோடி பயணிகள் பயணம்: தீபாவளி சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.9 கோடி வருமானம் கிடைத்துள்ளது: போக்குவரத்து துறை தகவல்

சென்னை: தீபாவளி சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.9 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தகவல் தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி ஏராளமானவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் சென்று வந்தார்கள். இதனால் பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பயணிகளின் வசதிக்காக தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

கடந்த 20-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுன. இந்த நிலையில், தீபாவளி சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.9 கோடி அளவுக்கு வருமானம் கிடைத்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. சிறப்பு பஸ்கள் மூலம் 2.80 கோடி பயணிகள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். மேலும் பெண்களுக்கான இலவச பேருந்து சேவைகளில் கடந்த செப். வரை 173 கோடி பெண்கள் கட்டணமில்லாமல் பயணித்துள்ளார்கள் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

Tags : Deepavali ,Transport Department , 2.80 Crore Passenger Travel: Diwali Special Buses Earn Rs 9 Crore Revenue: Transport Department Information
× RELATED வார இறுதி நாட்களில் சிறப்பு...