தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்குகிறது: வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்குகிறது என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்தார். சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் படிப்படியாக மழை அதிகரிக்கும். பருவமழை தொடங்குவதற்கான சூழல் நிலவுகிறது. வரும் நாட்களில் மழை பொழிவு படிப்படியாக அதிகரிக்கும். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்குகிறது.

நவம்பர் 4ம் தேதி வரை படிப்படியாக மழை அதிகரிக்கும். சிட்ரங் புயலால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு இயல்பை விட 45% அதிகமாக பெய்துள்ளது.தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் இருந்து அக். 23-ம் தேதி விலகியது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்.சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறினார்.

Related Stories: