×

சென்னை அடையாறில் அம்பேத்கர் மணிமண்டபம் மற்றும் உருவ சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை: சென்னை அடையாற்றில், அம்பேத்கர் மணிமண்டம் மற்றும் அம்பேத்கர் வெண்கல சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.  தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. தொல். திருமாவளவன் அவர்களால் வழங்கப்பட்ட பாரத ரத்னா, பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் முழு திருவுருவச் சிலையினை திறந்து வைத்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. தொல். திருமாவளவன் அவர்களால் 14.4.2022 அன்று பாரத ரத்னா, பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 132-ஆவது பிறந்த நாளன்று சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அண்ணல் அம்பேத்கரின் முழு திருவுருவச் சிலை நிறுவுவதற்காக வழங்கப்பட்டது.  அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 14.5.2022 அன்று அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அச்சிலையினை நிறுவுவதற்கான இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்படி, சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் முழு திருவுருவச் சிலையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என். நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் திரு. எ.வ. வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர்பாபு,  தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. சி.வி. கணேசன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் திருமதி. என். கயல்விழி செல்வராஜ், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. தொல். திருமாவளவன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. அந்தியூர் செல்வராஜ்,  திரு. ஆர். கிரிராஜன், திருமதி தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. தாயகம் கவி, திரு. த. வேலு, திரு. சிந்தனைச் செல்வன், திரு. செல்வப்பெருந்தகை, திரு. எஸ்.எஸ். பாலாஜி, திரு. எம். பாபு, திரு. ஜெ. முகம்மது ஷா நவாஸ், துணை மேயர் திரு. மு. மகேஷ் குமார், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திரு. திண்டுக்கல் லியோனி, செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும்  அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Mani Mandapam ,Adyar, Chennai , Chief Minister M. K. Stalin inaugurated the Ambedkar Mani Mandapam and statue in Adyar, Chennai.
× RELATED தமிழ்நாட்டை மொழி, இனம், பண்பாட்டு...