
சென்னை : அரசு மருத்துவமனைகளில் கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகள் உண்மையில் ஏழை மக்களை சென்றடைவதில்லை என ஐகோர்ட் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் வேதனை தெரிவித்துள்ளார். ஏழைகளுக்கு வாங்காமலேயே வழங்கப்பட்டதாக பதிவுகள் செய்யப்படுகின்றன என்றும், அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் விநியோகிப்பது தீவிரமான விசயம் என்றும் அவர் தெரிவித்தார்.