×

போரில் இதுவரை உக்ரைன் மீது 400க்கும் மேற்பட்ட டிரோன்களைப் பயன்படுத்தி ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது: அதிபர் ஜெலென்ஸ்கி தகவல்

கீவ்: உக்ரைனுக்கு எதிரான போரில் இதுவரை 400க்கும் மேற்பட்ட ஈரானிய டிரோன்களைப் பயன்படுத்தி ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனுக்கு எதிராக ரஷியா மேற்கொண்டு வரும் போர் 8 மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த தாக்குதலை உக்ரைனும் சளைக்காமல் எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நேற்று பேசும்போது கூறியதாவது: உக்ரைனுக்கு எதிரான போரில் இதுவரை உக்ரைன் மீது 400க்கும் மேற்பட்ட ஈரானிய டிரோன்களைப் பயன்படுத்தி ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது.

அவற்றுள் 60-70 சதவீதம் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. உக்ரைனிலிருந்து தானியங்களை ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய எற்றிச்சென்ற 170க்கும் அதிகமான உக்ரைன் சரக்குக் கப்பல்கள் துருக்கியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

அங்குள்ள உக்ரைன் சரக்குக் கப்பல்களில் ரஷியா வேண்டுமென்றே தேவையற்ற ஆய்வுகள் செய்து அதன்மூலம் கப்பல்கள் செல்வதை தாமதப்படுத்துகிறது. ஆகவே ரஷியா இந்த கப்பல்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். ரஷியாவுடனான போரில், உக்ரைனுக்கு இஸ்ரேல் ஆதரவு அளிக்காமல் இருப்பதால் ஈரானுடன் ரஷியா ராணுவ உறவுகளை பலப்படுத்தி வருகிறது என்று முன்பு அவர் கூறியிருந்தார். இந்நிலையில் உக்ரைனும் இஸ்ரேலும் இப்போது முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றன என்றார்.

Tags : Russia ,Ukraine ,Chancellor ,Zelensky , Russia has used more than 400 drone strikes on Ukraine so far in war: President Zelensky
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...