×

காதல் விவகாரத்தில் விபரீத முடிவு பிளஸ்2 மாணவியுடன் வாலிபர் தற்கொலை

மேட்டூர்: சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே நங்கவள்ளி செம்மண்காட்டு வளவு பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் கோபி (26), நெசவுத் தொழிலாளி. இவரது வீட்டருகே வசிக்கும் முருகேசன் மகள் யுவஸ்ரீ (17),  பிளஸ் 2 படித்து வந்தார். இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்துள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன், உறவினர்களுடன் யுவஸ்ரீ வீட்டுக்குச் சென்ற கோபி, அவரை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு யுவஸ்ரீயின் பெற்றோர், மகளுக்கு   18 வயது பூர்த்தியானதும் திருமணம் செய்து வைப்பதாக தெரிவித்துள்ளனர். பின்னர், யுவஸ்ரீயை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் நிறுத்தி விட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தென்னந்தோப்பு ஒன்றில் கோபியும், யுவஸ்ரீ யும் விஷம் குடித்து வாயில் நுரை தள்ளியபடி மயங்கிக்கிடந்தனர். சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்கள் நேற்று அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். 


Tags : Volliber , Tragic result in love affair, teenager commits suicide with Plus 2 student
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே வாலிபர் மீது தாக்குதல்