பாஜ சார்பில் இன்று தமிழை காக்கும் போராட்டம்

சென்னை: தமிழை காக்கும் போராட்டம் என்ற தலைப்பில் பாஜக சார்பாக இன்று போராட்டம் நடத்தப்பட உள்ளது. கடலூரில் நடைபெறும் போராட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கிறார். தமிழக பாஜ சார்பாக ‘தமிழை காக்கும் போராட்டம்’ என்ற தலைப்பில் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த உள்ளது. இதற்கான போராட்ட அறிவிப்பை கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். அதன்படி, மாவட்ட தலைநகரங்களில் அந்தந்த மாவட்ட பாஜ தலைவர்கள் தலைமையில் பேராட்டம் நடைபெற உள்ளது. கடலூரில் தலைமை தபால் நிலையம் எதிரே பெரிய அளவில் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ள இருக்கிறார்.

Related Stories: