ரிஷி சுனக்கிற்கு டிடிவி தினகரன் வாழ்த்து

சென்னை: பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘பிரிட்டன் பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு வாழ்த்துகள். ஒரு காலத்தில் உலகைக் கட்டி ஆண்ட நாடு, தற்போது நெருக்கடியை சந்திக்கும் நேரத்தில் அதன் பிரதமராகி இருக்கும் ரிஷி சாதனைகள் புரிந்து நம் அனைவருக்கும் பெருமை தேடித்தரட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: