×

மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும்: கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் வலியுறுத்தல்

சென்னை: மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் முன்னெச்சரிக்கை தடுப்புகள், அடையாள பலகைகள் வைக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் இறையன்பு ஊரக வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் அமுதாவுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: பருவமழையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, வேலைகள் முடிவுபெறாமல் உள்ள நிலையில் பள்ளங்கள் மூடப்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது சாமானிய மக்களுக்கு, பாதசாரிகளுக்கு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.

எனவே, மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் வேறு சில வேலைகளுக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்களும் மற்றும் குழிகளும் மூடப்படாதிருப்பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புகள் மற்றும் அடையாள பலகைகள் வைக்க வேண்டும். மேலும், சாலைகளில் மழைநீர் வடிவதற்காக அமைக்கப்பட்டுள்ள துவாரங்கள் திறந்திருப்பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாவண்ணம் தடுப்புகள், அடையாள பலகைகள் ஆகியவற்றை மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பான அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தொடர்புடைய துறை தலைவர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Chief Secretary , Notice boards to be placed at places where rainwater drainage works are carried out: Chief Secretary insists to Collectors
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு...