×

சீனாவில் அறிமுகம் கொரோனாவை ஒழிக்க வாய்வழி தடுப்பு மருந்து

பீஜிங்: உலகிலேயே முதல் முறையாக சீனாவில் வாய் வழியாக செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்  செய்யப்பட்டுள்ளது. சீனாவின் உகானில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை கடந்த 2 ஆண்டுகளாக ஆட்டிப் படைத்தது. தற்போது, இதன் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். எனினும், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் சமீப காலமாக பிஎப்-7 என்ற உருமாற்ற கொரோனா வைரஸ் பரவி வருவதால், தொற்று எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.  

இந்நிலையில், சீனாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வாய்வழியாக உறிஞ்சக் கூடிய (இன்ஹேலர்) கொரோனா தடுப்பு மருந்து நேற்று அறிமுகம்  செய்யப்பட்டது. ஏற்கனவே, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோசாக இந்த வாய்வழி தடுப்பு மருந்தை வழங்கப்பட உள்ளது. ஊசி போட விரும்பாதவர்கள் இதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியும். இதை பயன்படுத்தும் போது மூச்சை 5 வினாடிகள் இழுத்து பிடிக்க வேண்டும். இந்த தடுப்பு மருந்து எடுத்துக் கொள்வதற்கான ஒட்டு மொத்த செயல்முறையும் 20 வினாடிகளில் முடிந்து விடும். சீனாவில் உள்ள கான்சினோ பயாலாஜிக்ஸ் நிறுவனம் இதை தயாரித்துள்ளது.


Tags : China , Oral vaccine to eliminate corona introduced in China
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...