×

கனடாவில் முதல் முறையாக டர்பன் அணிந்த பெண் கவுன்சிலர்

தொரந்தோ: கனடாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய பெண், கவுன்சிலராக முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கனடாவின் பிராம்டன் நகரை சேர்ந்தவர் நவ்ஜித் கவுர் பிரார். இந்திய வம்சவாளியை சேர்ந்த சீக்கியரான இவர் சுகாதார பணியாளராக வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் அங்கு நடந்த நகர வார்டு கவுன்சிலர் தேர்தலில் நவ்ஜித் போட்டியிட்டார். இந்த தேர்தலில்  2 மற்றும் 6வது வார்டில் கன்சர்வேட்டிவ் கட்சியின் முன்னாள் எம்பி ஜெர்மைனி சேம்பர்ஸ்சை தோற்கடித்து நவ்ஜித் வெற்றி பெற்றுள்ளார். இவர் 28.85 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். தேர்தல் பிரசாரத்துக்காக நவ்ஜித் சிங் கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 40ஆயிரம் வீடுகளில் வாக்கு சேகரித்துள்ளார். சுமார் 22,500பேரிடம் பேசியுள்ளார். பிராம்டன் நகர தேர்தலில் 40 சீக்கியர்கள் போட்டியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : Canada , Canada's first female councilor to wear a turban
× RELATED இந்திய மாணவர் சுட்டு கொலை: கனடாவில் பயங்கரம்