×

உக்ரைனில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதால் இந்திய மக்கள் வெளியேறுங்கள்: இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்

கீவ்: உக்ரைனில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதால் இங்குள்ள இந்திய பிரஜைகள் உக்ரைனை விட்டு உடனே வெளியேறுமாறு இந்திய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா இடையிலான தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், ‘அனைத்து இந்திய பிரஜைகளும் உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும். உக்ரைனில் பாதுகாப்பற்ற சூழல் அதிகரித்து வருவதால், இந்த ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன’ என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த 19ம் தேதி இதே போன்று உக்ரைனில் உள்ள அனைத்து இந்திய பிரஜைகளும், உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியது. அதன் தொடர்ச்சியாக, சில இந்திய பிரஜைகள் உக்ரைனை விட்டு வெளியேறியதாக தூதரகம் தெரிவித்தது. இந்த நிலையில் இரண்டாவது முறையாக தற்போது மீண்டும் இந்திய பிரஜைகளுக்கு தூதரகம் சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Tags : Indians ,Ukraine ,Consulate , Indians leave Ukraine due to insecurity: Consulate advises Indians
× RELATED கரூர் மாவட்டத்தில் எள் சாகுபடி 300 ஏக்கரை தாண்டியது