தஞ்சை அருகே 40 ஆண்டுகால போராட்டத்துக்கு பிறகு இருளர், ஆதியன்குடி பழங்குடி இன மக்களுக்கு சாதி சான்றிதழ்: மாவட்ட ஆட்சியர் நேரில் வழங்கினார்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே இருளர் மற்றும் ஆதியன்குடி பழங்குடி இன மக்களுக்கு 40 ஆண்டுகால போராட்டத்துக்கு பிறகு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன. கும்பகோணம் அருகே சோழபுரம் பனங்குடம் கிராமத்தில் இருளர் இன பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இதேபோன்று பேராவூரணி பகுதியில் ஆதியன்குடி என்ற பழங்குடியின மக்களும் வசித்து வருகின்றன. கடந்த 40 ஆண்டுகளாக தங்களுக்கு பழங்குடியின சாதி சான்றிதழ் வேண்டும் என கோரிக்கைகள் விடுத்து வந்த நிலையில், தற்போது அரசு இவர்களுக்கு பழங்குடியின மக்களுக்கான சாதி சான்றிதழ் வழங்கப்பட்டன.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ், இதனை நேரில் சென்று வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 250 குடும்பங்களுக்கு இருளர் மற்றும் ஆதியன்குடி பழங்குடி இன சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தினேஷ் கூறியுள்ளார். இவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக கான்கிரீட் வீடுகள் கட்டித்தர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் தெரிவித்தார்.

Related Stories: