×

விழுப்புரம் மாவட்டம் பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் 20 வீடுகளுக்கு மேல் கடலரிப்பால் பாதிப்பு: உடனடியாக தூண்டில் வளைவு அமைக்க கோரிக்கை

விழுப்புரம் : புதுச்சேரியை அடுத்த விழுப்புரம் மாவட்டம் பிள்ளைச்சாவடி மீனவ கிராமம் கடல் அரிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் பிள்ளைச்சாவடி கிராமம் பொம்மையார் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது. இந்த கிராமம் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கடல் அரிப்பால் முழுவதுமாக கொஞ்ச கொஞ்சமாக பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட 20-க்கு மேற்பட்ட வீடுகள் அடித்து செல்லப்பட்டுள்ளது.  அங்குள்ள வீடுகள் தொடர்ந்து இடிந்து வருவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொம்மையார் பாளையத்தில் கருங்கல் கொட்டப்பட்டதன் காரணத்தால் பிள்ளைச்சாவடி கிராமத்தில் கடல் அரிப்பு அதிகளவில் ஏற்பட்டுள்ளது.

2 ஆண்டுகளில் 500மீட்டருக்கு மேல் கடல் அரிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த பகுதியில் 200-க்கு மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில், சாலையின் ஒரு பகுதி முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்பகுதி மக்கள் உடனடியாக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என கோரி கிழக்கு கடற்கரை சாலையிலேயே மீனவ கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். அதில் தங்களுடைய ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆகியவைகளை சாலையில் தூக்கி எரிந்து மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த வருவாய் துறையினர் சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பிள்ளைச்சாவடி கிராமமே கடலுக்குள் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக தூண்டில் வளைவு அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Viluppuram ,Pillaichavadi , Villupuram, Pillichavadi, Fisherman, Village, Seashore, Bait, Bend, Set, Request
× RELATED விழுப்புரம் அருகே லாரி கவிந்து...