×

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விடுபட்டது நிம்மதியாக உள்ளது; கட்சிக்கு என்னால் முடிந்த யாவையும் செய்தேன்: சோனியா காந்தி பேச்சு

டெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விடுபட்டது நிம்மதியாக உள்ளது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். கடந்த 17ம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கட்சி பதிவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் தலைவர் பதிவிக்காக கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூனா கார்கே, சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 7,897 வாக்குகள் பெற்று பெரும்பான்மையோடு வெற்றி பெற்ற கார்கே, கட்சி அலுவலகத்தில் இன்று தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். 24 ஆண்டுகளுக்கு பிறகு காந்தி, நேரு குடும்பத்தை அல்லாத ஒருவர் முதன்முறையாக கட்சி தலைவர் பொறுப்பேற்றுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக இருந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய, சோனியா காந்தி, புதிய காங்கிரஸ் தலைவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர் என்பதும், ஒரு சாதாரண தொழிலாளியாக இருந்து தனது கடின உழைப்பின் மூலம் இவ்வளவு உயரத்திற்கு உயர்ந்திருப்பது தனக்கு மிகப்பெரிய திருப்தியாக உள்ளது. காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் கட்சிக்கு என்னால் முடிந்த யாவையும் செய்தேன்.

காங்கிரஸ் கட்சி தலைவராக இருப்பது மிகப்பெரிய பொறுப்பு, அது இப்போது கார்கேவிடம் உள்ளது. காங்கிரஸ் கட்சி பல சவால்களை சந்தித்து வருகிறது, முழு பலத்துடன் ஒற்றுமையுடன் நாம் அனைவரும் முன்னோக்கி சென்று வெற்றி பெற வேண்டும். மல்லிகார்ஜுன கார்கேவின் தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சி புதிய உத்வேகம் பெற்று வலுவடையும் என்று நம்புகிறேன். தற்போது நமது முன்னால் நாட்டின் ஜனநாயக மதிப்புகளுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் மிகப் பெரிய சவால் உள்ளது என்று தெரிவித்தார்.

Tags : Congress ,President ,Sonia Gandhi , Congress president, Nimmathi, Sonia Gandhi
× RELATED இந்தியாவின் எதிர்காலத்தை...