×

ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் மலைகளால் சூழ்ந்த ஏலகிரியில் மலைவாழ் மக்கள், சுற்றுலா பயணிகள் தீபாவளி கொண்டாட்டம்

* பலகாரம் பகிர்ந்து பரவசம்

* பட்டாசு வெடித்து ஆனந்தம்

ஏலகிரி : சுற்றுலா தலமான ஏலகிரி மலையில் தீபாவளி பண்டிகையை குடும்பத்துடனும், குழந்தைகளுடனும், சுற்றுலா பயணிகள் மகிந்தனர். பட்டாசு வெடித்தும் பலகாரங்களை பகிர்ந்தும் மலைவாழ் மக்கள் ஆனந்தமடைந்தனர்.    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை நான்கு பக்கங்களிலும் மலைகளால் சூழ்ந்து இதன் மத்தியில் 14 சிறிய கிராமங்களை உள்ளடக்கிய தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது.

இங்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வாழும் மக்கள் முக்கிய தொழிலாக விவசாயம், பால் உற்பத்தி, ஆடு, மாடு, கோழி, வளர்ப்பு, ஆகிய பணிகளை முக்கிய தொழிலாக செய்து வருகின்றனர். ஏலகிரி மலையில் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதில்லை. ஆனால் பொங்கல் விழாவை மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதுமட்டுமில்லாமல், புரட்டாசி மாத மூன்றாம் சனிக்கிழமை வெங்கடேச பெருமாள் பூஜை மிகப் பிரம்மாண்டமாக செய்து வழிபட்டு வருகின்றனர். மேலும் அனைத்து கிராமங்களில் உள்ள கோயில்களில் சிறப்பு திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு, ஒரு வார பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.  

திருவிழாக் காலங்களில் பாரம்பரிய நடனமான கோலாட்டம், தெருக்கூத்து, சேவாட்டம், மயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளை  நடத்தி வருகின்றனர். இத்திருவிழா பிரம்மாண்டமாக முன்னோர் காலத்தில் இருந்து பாரம்பரியம் பாரம்பரியமாக செய்து வருகின்றனர். இதனைக் காண வெளிநாடுகளில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில், இருந்தும் மாநிலங்களில் இருந்தும் வந்து, கண்டு களித்து செல்கின்றனர். ஆனால் தீபாவளியை பண்டிகை முன்னோர்கள் காலத்தில் இருந்து கொண்டாடாமல் இருந்தனர்.

இந்தப்பண்டிகையை கொண்டாடப்படாமல் இருந்ததற்கு முக்கிய காரணமாக ஏலகிரி மலைப்பகுதிகளில் உள்ள வனவிலங்குகள், பறவைகள், மலைகளில் வாழும் உயிரினங்கள் வெடி சப்தங்களால் இடம் பெயர்ந்து விடும் என்று எண்ணி தீபாவளியை கொண்டாடமல் இருந்தனர். இது நாளடைவில் மாறி தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். மலைவாழ் மக்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். தீபாவளி பண்டிகையான நேற்று முன்தினம் புத்தாடைகள் உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும், உற்றார் உறவினர்களுக்கு பலகாரங்கள் வழங்கியும் கொண்டாடினார்கள்.

மேலும் நேற்று தீபாவளி பண்டிகையையொட்டி பகல் நேரங்களிலும், இரவு நேரங்களிலும், மத்தாப்பூ, சங்கு சக்கரம் போன்ற பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை உறவினர்களுக்கு வழங்கியும் மகிழ்ந்து வருகின்றனர். மேலும் தீபாவளி பண்டிகையொட்டி ஏலகிரி மலைக்கு சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணமாக உள்ளனர்.

அவர்கள் தாங்கள் கொண்டு வந்த பலகாரம், உணவுகளை உறவினர்கள், நண்பர்களிடம் பகிர்ந்து உண்டு அவர்களும் தீபாவளி கொண்டாடி ஆனந்தமடைந்தனர். அதேபோல் குழந்தைகளுடன் அருகிலேயே சென்று பறவையினங்களை பார்த்து சுற்றுலா பயணிகள் பரவசம் அடைந்தனர்.

Tags : Diwali ,Yelagiri ,Jolarpet , Elagiri: Tourists with their families and children enjoyed the Diwali festival at the tourist destination of Elagiri hill. Fireworks will explode
× RELATED ஜோலார்பேட்டை தொகுதியில் தள்ளாத...