சென்னை: கோவை கார் வெடிப்பு சம்பவத்தை என்ஐஏ விசாரிக்க அரசு பரிந்துரைத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். கோவை உக்கடம் பகுதியில் கடந்த 23-ம் தேதி நிகழந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோவையில் பாதுகாப்பை தொடர்ந்து உறுதிப்படுத்தவும் காவல்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார்.
